ஜூன் 10ஆம் தேதி பாட புத்தகங்கள் வழங்க நடவடிக்கை.
புத்தகம்
தமிழக முதல்வர் ஆணையின் படி, தமிழ்நாடு அரசு, பள்ளிக்கல்வித் துறையில் 2024-25 கல்வியாண்டில் அனைத்து வகை அரசு, அரசு உதவி பெறும் , பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகளில் நிதி உதவி பெறும் வகுப்புகள் மற்றும் சுயநிதிப் பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் தமிழ் வழியில் இயங்கும் வகுப்புகள் ஆகியவற்றில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ , மாணவிகளுக்குப் பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகம். புத்தகப்பை, காலணிகள், காலேந்திகள் மற்றும் காலுறைகள், கம்பளிச்சட்டை, மழைக்கோட்டு, பூட்ஸ் மற்றும் காலுறைகள், சீருடைகள், வண்ணப்பென்சில்கள், வண்ணக்கிரையான்கள். மிதிவண்டிகள். கணிதஉபகரணப் பெட்டிகள் மற்றும் புவியியல் வரைபடம் ஆகிய நலத்திட்டப் பொருட்கள் வழங்கப்படவுள்ளது.
இவற்றை பள்ளி திறக்கப்படும் நாளான ஜூன் 10ஆம் தேதி அன்றே மாணவ , மாணவிகளுக்குப் பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகம் மற்றும் புவியியல் வரைபடம் ஆகிய நலத்திட்டப் பொருட்கள் வழங்கப்படவுள்ளது. பாடப்புத்தகம் வழங்கப்படும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை - 70,67,094 நோட்டுப்புத்தகம் வழங்கப்படும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை - 60,75,315 புவியியல் வரைபடம் வழங்கப்படும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை -8,22,603