கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு

பள்ளிகள்

கோடை விடுமுறைக்குப் பிறகு அரியலூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன. இதையொட்டி பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை ஆர்வமுடன் பள்ளிக்கு அழைத்து வந்தனர். பள்ளிக்கு வந்த மாணவ,மாணவிகளை ஆசிரியர்கள் மலர்கள் மற்றும் இனிப்புகளை வழங்கி வரவேற்றனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதல் நாளிலேயே விலையில்லா பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தியவர்களுக்கு மட்டும் பாடநூல்கள் வழங்கப்பட்டன. மாணவர்களுக்கான புதிய இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படும் வரை ஏற்கெனவே உள்ள பழைய அட்டையைப் பயன்படுத்தி பயணிக்கலாம் என போக்குவரத்துத் துறை அறிவுறத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story