ஜூன் 2வது வாரம் பள்ளிகளை திறக்கலாம்- டாக்டர் ராமதாஸ்

ஜூன் 2வது வாரம் பள்ளிகளை திறக்கலாம்- டாக்டர் ராமதாஸ்

 ராமதாஸ்

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், பள்ளிகள் திறப்பை ஜூன் மாதம் இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என பாமகநிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழகத்தில் ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை அரசு தீர்மானிக்க வேண்டும் . ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டால் சுட்டெரிக்கும் வெயிலால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். வெயில் கடுமையாக இருப்பதால் பொதுமக்கள், தொழிலாளர்கள் வெளியே வரவேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story