ரமணா பப்ளிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

ரமணா பப்ளிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

அறிவியல் கண்காட்சி 

மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்
திருக்கோவிலூர் அடுத்த காட்டுச்செல்லூர் ஸ்ரீ ரமணா பப்ளிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியை பள்ளியின் தாளாளர் பாஸ்கரன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் கிருத்திகா வரவேற்றார். மாணவ, மாணவிகள் உருவாக்கிய அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். மாணவர்கள் படைப்புகளுக்கான விளக்கங்களை பார்வையாளர்களுக்கு அளித்தனர். கண்காட்சியை உருவாக்கிய மாணவர்களை பாராட்டினர்.

Tags

Next Story