தமிழ்நாட்டின் கடற்கரை கிராமங்களை இலக்கு வைத்து பாதயாத்திரை செல்வதாக சீமான் திட்டம் !!!

தமிழ்நாட்டின் கடற்கரை கிராமங்களை இலக்கு வைத்து பாதயாத்திரை செல்வதாக சீமான் திட்டம் !!!

சீமான்

லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த கையுடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்நாடு முழுவதும் பாமரனின் நடைபயணம் என்ற தலைப்பில் பாதயாத்திரை மேற்கொள்வதாக திட்டமிட்டுள்ளார். தமிழ்நாட்டின் கடற்கரை கிராமங்களை இலக்கு வைத்து சீமான் இந்த பாதயாத்திரையை மேற்கொள்ள இருக்கிறார்.

அரசியலில் 15 ஆண்டுகளாக சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் வெற்றி பெறாத கட்சி தான் நாம் தமிழர் கட்சி ஆனாலும் ஒவ்வொரு தேர்தலிலும் தனித்தே போட்டியிட்டு வருகின்றனர். அனைத்து தொகுதிகளும் தனித்துப் போட்டியிடுவதால் வாக்கு சதவீதம் உயர்ந்து கொண்டே வருகிறது. தமிழ்நாட்டில் ஆளும் திமுக எதிர்க்கட்சி அதிமுகவுக்கு அடுத்த மூன்றாவது பெரிய கட்சி எது என்பதில் அண்மையில் கூட பாஜகவும் நாம் தமிழர் கட்சியும் மோதிக்கொண்டன.

பாஜகவை விட குறைவான வாக்கு சதவீதம் பெற்றால் கட்சியை கலைப்பேன் என அண்ணாமலைக்கு சவால் விட்டார் சீமான். லோக்சபா தேர்தலில் சீமான் நிலைப்பாடு குறித்த பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. நாம் தமிழர் கட்சியிலிருந்து தொடர்ந்தும் பலர் வெளியேற்றப்படும் வருகின்றனர். ஆனாலும் எந்த எதிர்ப்பும் பொருட்படுத்தாமல் சீமான் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்கிறார்.

லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லும் வாய்ப்பு குறைவு தான் என்கின்ற நிலை உள்ளது ஆனால் அடுத்த கட்டமாக 2026 சட்டசபை தேர்தலை விளக்கு வைத்து முதல் கட்சியாக களமிறங்குகிறது நாம் தமிழர் கட்சி. சீமான் பாதயாத்திரை மேற்கொள்ளப்பட இருக்கின்ற நிலையில் மீனவர்கள் பிரச்சனைக்காக தொடர்ந்து பேசி வருகிறார். மீனவர்களுக்காக நெய்தல் படை கட்டுவேன் எனவும் சீமான் பேசி வருகிறார். அடுத்த கட்டமாக கடலோரம் கிராமங்களை குறி வைத்து சீமான் பாதயாத்திரை செல்ல இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story