இரண்டாவது சுதந்திர போராட்டம், இந்தியா கூட்டணியை ஆதரியுங்கள் : கனிமொழி

எதிர்க்கட்சிகள் மோடியை அவருடைய ஆட்சியில் இருக்க கூடிய குறைகளை எடுத்துச் சொல்லக் கூடாது யார் இதைச் சொன்னாலும் சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள். இரண்டு முதலமைச்சர்கள் இன்று சிறையில் இருக்கிறார்கள். எனவே இந்தியா கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி பேசினார்.

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக துணை பொது செயலாளர் கனிமொடி எம்பி இறுதி நாளான இன்று பல்வேறு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டையில் பிரச்சாரத்தில் ஈடுபடும் போது அவர் பேசியதாவது வரக்கூடிய தேர்தல் மோடிக்கு, அதிமுகவிற்கு ஓட்டு போடக்கூடாது என்பது உங்களுக்கு தெரியும் இல்லையா ஆனா போய் ஓட்டு போடணும் வெயிலுக்கு அப்புறம் போகலாம் ஒரு நாள் லீவு என்று வீட்டில் உட்கார்ந்து விடக்கூடாது நீங்க போறது மட்டுமல்ல உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய மற்றவர்களையும் அழைத்துச் செல்ல வேண்டும். பக்கத்து வீடு அடுத்த வீட்டில் உட்கார்ந்தவர்களையும் ஓட்டு போட வைக்க வேண்டும் ஏனென்றால் நமக்கு என்று ஒரு ஜனநாயக கடமை உள்ளது.

இந்த நாட்டை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது ரொம்ப கஷ்டப்பட்டு எத்தனை பேர் உயிரிழந்து சிறைக்குச் சென்று இங்கு அத்தனை பேருக்கும் தெரியும் ஆங்கிலேயர்கள் கிட்ட இருந்து நாம் விடுதலை வாங்கி இருக்கோம் இன்னைக்கும் மறுபடியும் ஒரு அடக்குமுறை ஆட்சி ஒன்றியத்தில் நடந்து கொண்டிருக்கிறது பிஜேபி ஆட்சி போராடக்கூடிய உரிமை மக்களுக்கு கிடையாது அரசாங்கத்தை குற்றம் சொல்ல கூடிய உரிமை பத்திரிக்கை ஊடகத்திற்கு கிடையாது எதிர்க்கட்சிகள் மோடியை அவருடைய ஆட்சியில் இருக்க கூடிய குறைகளை எடுத்துச் சொல்லக் கூடாது யார் இதைச் சொன்னாலும் சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள்.

இரண்டு முதலமைச்சர்கள் இன்னைக்கு சிறையில் இருக்கிறார்கள் ஒரு துணை முதலமைச்சர் நிறைய எதிர்க்கட்சித் தலைவர்கள் இவர்களெல்லாம் மோடி பக்கம் போய் விட்டால் சுத்தமாய் விடுகிறார்கள்வ எதிர்த்து நின்றால் சிறைச்சாலை மோடி வரமாட்டார் திரும்ப வர மாட்டார் வந்துட்டா இதுதான் நம்முடைய கடைசித் தேர்தல் ஜனநாயகம் இருக்காது சர்வாதிகாரம் மட்டும்தான் இந்த நாட்டில் மிஞ்சும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் மன்னர் ஆட்சியை கூட கிடையாது சார்வாதிகார ஆட்சி தான். மோடி மக்களுக்கு கடந்த 10 ஆண்டுகளிள் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை இப்படி வெயில் நீங்க கஷ்டப்படுகிறோம் அதே போன்று தான் இந்த ஆட்சியும் பத்து வருஷம் சுட்டெரிக்க கூடிய ஆட்சி மக்களை வாட்டி வதைக்கக்கூடிய ஆட்சி ஆனால் நம்முடைய ஆட்சி நம்முடைய முதலமைச்சர் அவர்கள் மக்களுக்கான திட்டங்களை வாக்குறுதிகளை நிறைவேற்றி தரக்கூடியவர்.

மோடி நமக்கு செய்யாத நமக்கான திட்டங்களை செய்யக்கூடிய முதலமைச்சர் நமது முதலமைச்சர் ஆயிரம் ரூபாய் கலைஞர் உரிமைத்தொகை கொடுக்கிறேன் சொன்னார் இன்னைக்கு ஒரு கோடி 15 லட்சம் சகோதரிகளுக்கு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டுள்ளது சில பேருக்கு விடுபட்டுள்ளது அவர்களுக்கு தேர்தல் முடிந்த பின்பு இன்னொரு முகாம் அமைக்கப்பட்டு கொடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் அதே போன்று கேஸ் சிலிண்டர் மானியம் கொடுக்கிறேன் என்று கூறினார் கொடுக்கவில்லை வரவில்லை இன்னைக்கு கேஸ் சிலிண்டர் விலை 1200 நமது இந்தியான கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கேஸ் சிலை 500 ரூபாய் பெட்ரோல் 75 ரூபாய் கொடுக்கப்படும் டீசல் 65 ரூபாய் கொடுக்கப்படும் அதேபோல் உங்க பேங்க் அக்கவுண்ட்ல காசு கம்மியான பிடித்து விடுகிறார்கள் அது நிறுத்தப்படும் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பின்புதங்க நகை விலையை குறைக்க உறுதியாக சொல்லுகிறோம்.

அதை நம்ம குறைக்க முடியாது அங்குதான் குறைக்க வேண்டும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கிறார்கள் ஏழ்மையில் உள்ள ஒரு குடும்பத்திற்கு ஏழ்மையில் உள்ள ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்கள் நம்முடைய முதலமைச்சர் உங்களுக்கு உடைய வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்ற வேண்டும் நம்முடைய நாட்டில் தொடர்ந்து பிஜேபி மக்களுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வருகிறார்கள் சர்வாதிகார அத்தனை முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள் .

அதை தடுத்து நிறுத்த வேண்டும் நம் கடமை நமது முதலமைச்சர் செல்வது போல் இரண்டாவது சுதந்திர போராட்டம் என்ற உணர்வோடு இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும் உங்களை எல்லாம் வேண்டி கேட்டுக்கொள்கிறேன் கொரோனா வந்தபோது மோடி வீடுகளில் தட்டை தட்ட சொன்னார் வைத்தியம் பார்க்கவில்லை மருந்து மாத்திரை கொடுக்கவில்லை அஓடுவதற்கு நாம் தட்டை தட்ட வேண்டும் ஓட்டு எண்ணும் மணிக்கு நம்ம தட்டி விடுவோம் வரக்கூடிய தேர்தலிலே தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்

Tags

Next Story