இடைநிலை ஆசிரியர்கள் ஏழாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு கைது

இடைநிலை ஆசிரியர்கள் ஏழாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு கைது

கைது

ஏழாவது நாளாக சென்னை நுங்கம்பாக்கம் டி பி ஐ வளாகத்தை நெருங்கி போராட்டத்தை தொடர வந்த இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களை இன்றும் காவல் துறையினர் கைது செய்து மண்டபங்களில் அடைத்தனர்.
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் ஏழாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட முயன்று கைதாகினர். 2009 ஆம் ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதிக்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு கடைநிலை ஊழியர்கள் பெரும் அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு 14 ஆண்டு காலமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒரே பணி ஒரே கேள்வி தகுதி என இருந்த போது இரண்டு விதமான ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது களையக்கூறி 12 ஆண்டுகளாக இடைநிலை பதிவு மூக்கு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ற பின் அக்டோபர் 6ஆம் தேதி நடந்த கடைசி கட்ட பேச்சுவார்த்தையில் கண்டிப்பாக மூன்று மாதங்களுக்குள் மூன்று நபர் ஊதிய குழு அறிக்கை பெற்று சம வேலைக்கு சம ஊதிய கோரிக்கையை சரி செய்வதாக தெரிவித்தனர். கடந்த நான்கு மாதத்தில் பலமுறை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கையை நிறைவேற்ற மனுக்கள் அளித்தும் பயனில்லை. இதன் காரணமாக மீண்டும் இடைநிலை பதிவு முன்பு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று ஏழாவது நாளாக சென்னை நுங்கம்பாக்கம் டி பி ஐ வளாகத்தை நெருங்கி போராட்டத்தை தொடர வந்த இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களை இன்றும் காவல் துறையினர் கைது செய்து மண்டபங்களில் அடைத்தனர். நாளை முதல் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள முதன்மை கல்வி அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்த உள்ளனர்.

Tags

Next Story