உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.68 ஆயிரம் பறிமுதல்!
ரூ.68 ஆயிரம் பறிமுதல்
அரக்கோணம் அருகே உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட பணம் நிலை கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே பள்ளூர் சோதனைச்சாவடியில் நாடாளுமன்ற தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது சென்னையில் இருந்து சோளிங்கர் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் ரூ.68 ஆயிரத்து 400 இருந்தது தெரிய வந்தது. மேலும்,அந்த பணத்திற்குரிய உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் பணத்தை பறிமுதல் செய்து அரக்கோணம் தாசில்தார் செல்வியிடம் ஒப்படைத்தனர்.
Next Story