ராணிப்பேட்டை மாவட்ட விளையாட்டு விடுதிக்கான தேர்வு போட்டி!

ராணிப்பேட்டை மாவட்ட விளையாட்டு  விடுதிக்கான தேர்வு போட்டி!

பைல் படம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் விளையாட்டு விடுதிக்கான தேர்வு போட்டி குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர் விளையாட்டு துறையில் சாதனைகளை புரிவதற்கு ஏற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய முதன்மை நிலை விளையாட்டு மையங்கள், விளையாட்டு விடுதிகள் மற்றும் சிறப்பு விளையாட்டு விடுதிகள் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

2024 25 ஆம் ஆண்டிற்கான முதன்மை நிலை விளையாட்டு மையம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் மாணவியர் விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கான தேர்வுகள் குறித்து ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும்.

மேலும் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மைய அலைபேசி 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம். மேலும் அலுவலகத்தையும் நேரில் அணுகி பயன்பெறலாம் என பிராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story