தேசிய ஐஸ் ஸ்கேட்டிங் போட்டிக்கு தேர்வு: ஆட்சியர் பாராட்டு!

தேசிய ஐஸ் ஸ்கேட்டிங் போட்டிக்கு தேர்வு: ஆட்சியர் பாராட்டு!

தேசிய ஐஸ் ஸ்கேட்டிங் போட்டிக்கு தேர்வாகியுள்ள தூத்துக்குடி வஉசி கல்லூரி மாணவருக்கு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி பாராட்டு தெரிவித்தார்.


தேசிய ஐஸ் ஸ்கேட்டிங் போட்டிக்கு தேர்வாகியுள்ள தூத்துக்குடி வஉசி கல்லூரி மாணவருக்கு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி பாராட்டு தெரிவித்தார்.

ஐஸ் ஸ்கேட்டிங் என்பது மிகவும் பிரித்யேகமான விளையாட்டு. கடந்த 23.05.24 முதல் 27.05.24 வரை ஐஸ் ஸ்கேட்டிங் அசோஸியேஷன் ஆப் தமிழ்நாடு ஹரியானா மாநிலத்தில் நடத்திய மாநில அளவிலான பயிற்சி முகாம் மற்றும் போட்டியில், தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இருந்து வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு பதக்கங்களை பெற்றனர். பல்வேறு வயது பிரிவினர்க்கு நடைபெற்ற இப்போட்டியில் ABOVE 19 பிரிவில் தூத்துக்குடியை சேர்ந்த ஷாரா ஸ்கேட்டிங் கிளப் மற்றும் V.O.C. கல்லூரியின் GEOLOGY துறையை சார்ந்த மாணவர் நூ. முகமது பிலால் 500 மீட்டர், 300 மீட்டர் போட்டிகளில் கலந்து கொண்டு இரண்டு தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் தேசிய அளவிலான ஐஸ் ஸ்கேட்டிங் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். ஐஸ் ஸ்கேட்டிங் போட்டியில் முதல் முறையாக பதக்கம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தவர் என்பது குறிப்பிடதக்கது. வெற்றி பெற்ற இம்மாணவனை தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் கோ. லட்சுமிபதி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவர் அந்தோணி அதிஷ்டராஜ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். மாவட்ட ஐஸ் ஸ்கேட்டிங் சங்க தலைவர் கௌதமன், செயலாளர் மற்றும் தலைமை ஸ்கேட்டிங் பயிற்சியாளர் முபாரக், மற்றும் ஷாரா கலை பயிற்சி பள்ளி இயக்குனர் ஷாநவாஸ், சங்க உறுப்பினர்கள் மின்னல் அம்ஜத் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story