சென்னையில் தேர்தல் பணியாளர்களை குழுக்கள் முறையில் தேர்வு செய்யும் பணி

சென்னையில் தேர்தல் பணியாளர்களை குழுக்கள் முறையில் தேர்வு செய்யும் பணி

குலுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்ட பணியாளர்கள்

சென்னையில் தேர்தல் பணியாளர்களை குழுக்கள் முறையில் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் 2024 ஐ முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரியவுள்ள காவல் பணியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் ஆகியோரை வாக்குச்சாவடிகளின் வாரியாக கணினி குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலரும், கூடுதல் தலைமைச் செயலாளரும், ஆணையாளருமான டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், தலைமையில் இன்று ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், கூடுதல் காவல் ஆணையாளர் கபில் குமார் சி. சரட்கர், தேர்தல் பொது பார்வையாளர்கள் டாக்டர் டி. சுரேஷ்,. கார்த்திகே தன்ஜி புத்தப்பாட்டி, முத்தாடா ரவிச்சந்திரா, தேர்தல் காவல் பார்வையாளர்கள் உதய் பாஸ்கர் பில்லா, சஞ்சய் பாட்டியா,

கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் ராஷ்மி சித்தார்த் ஜகடே, (சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர்) ஆர். லலிதா (கூடுதல் ஆணையாளர் (வருவாய் (ம) நிதி), டாக்டர் வி. ஜெய சந்திர பானு ரெட்டி, (கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்)), டாக்டர் ஜி. எஸ். சமீரன், (இணை ஆணையாளர் (பணிகள்)), ஷரண்யா அறி, (துணை ஆணையாளர் (கல்வி) மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story