காங்கிரஸ் தொகுதி பட்டியல் டெல்லிக்கு அனுப்பி வைப்பு

தமிழகத்தில் போட்டியிடும் 9 தொகுதிகளின் பட்டியலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி டெல்லி தலைமைக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள், புதுச்சேரி 01தொகுதி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது... 9 தொகுதிகள் என்னென்ன என்று அடையாளம் காண திமுக - காங்கிரஸ் மறைமுக பேச்சுவார்த்தை ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் போட்டியிடும் 9 தொகுதிகளின் பட்டியலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி டெல்லி தலைமைக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை இப்போது திமுக-விடம் தொலைபேசி மூலம் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சில தொகுதிகளை மாற்றி கொடுக்க திமுக திட்டமிட்டுள்ள நிலையில் தொகுதி என்னென்ன என்று ஓரிரு நாட்களில் இறுதியாகும் என கூறப்படுகிறது..

Tags

Next Story