2024தேர்தலில் எஜமானர்களை வீட்டுக்கு அனுப்புங்கள்: அமைச்சர் உதயநிதி

2024தேர்தலில் எஜமானர்களை  வீட்டுக்கு அனுப்புங்கள்: அமைச்சர் உதயநிதி

தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்


கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அழகிய மண்டபத்தில் இன்று நடந்தது.

கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அழகிய மண்டபத்தில் இன்று நடந்தது. கூட்டத்திற்கு இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார். திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் முதலமைச்சர் போட்ட 3 கையெழுத்தில் முதல் கையெழுத்து மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து. பெண்கள் கல்விக்காக புதுமைப்பெண் திட்டம். அவர்கள் வங்கிக் கணக்கில் மாதம் 1000 ரூபாய் ஊக்கதொகை வழங்குகிறோம்.

1 முதல் 5 வரை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 31 ஆயிரம் பள்ளியில் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். மோடி, மத்திய பிரதேசம் உள்பட எங்கு சென்றாலும் தி.மு.க. பற்றியும், தலைவரை பற்றியும் குறிப்பாக என்னைப் பற்றியும்தான் பேசுகிறார். அவருக்கு என் மேல் அவ்வளவு பிரியம். பிரதமர் மோடி 9 ஆண்டுகளில் எதுவுமே செய்யவில்லை. தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி நடப்பதாக சொல்கிறார்.

தமிழகமே ஒரே குடும்பமாக செயல்படுகிறோம். ஆயுஷ்மன் பாரத் திட்டத்தில் இறந்துபோன 88 ஆயிரம் பேருக்கு ஆயுள் காப்பீட்டுத்திட்டம் கொடுத்திருக்கிறார்கள். நான் பேசாததை பேசியதாக பரப்பினார்கள். நான் பேசிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார்கள். நான் மன்னிப்பு கேட்க மாட்டேன், நான் கலைஞரின் பேரன். சேலத்தில் நடைபெறும் இளைஞர்களின் மாநாட்டில் 50 லட்சம் பேர் கையெழுத்திட்ட போஸ்ட் கார்டை முதலமைச்சரிடம் வழங்க வேண்டும்.

இந்தியாவை மீட்க இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். 2021-ல் அடிமைகளை வீட்டிற்கு அனுப்பினீர்கள். தற்பொழுது 2024-ல் நடைபெறும் தேர்தலில் அடிமைகளை மட்டும் இன்றி எஜமானர்களையும் வீட்டிற்கு அனுப்ப வேண்டும். சேலம் இளைஞர் அணி மாநாடு இதற்கு முத்தாய்ப்பாய் அமைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story