தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு

தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு

 தஞ்சாவூரில் இருந்து ரூ. 26 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 

தஞ்சாவூரில் இருந்து ரூ. 26 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

சென்னையில் மிக்ஜாம் புயல் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் இருந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மற்றும் பேரூராட்சிகள் துறையின் சார்பில் ரூ.26,62,684 மதிப்புள்ள உணவுப் பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை லாரிகளில் ஏற்றி சென்னை மாநகராட்சி புழுதிவாக்கம் நிவாரண மையத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் அனுப்பி வைத்தார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, பேரூராட்சிகள் உதவி இயக்குநர் மாஹின் அபுபக்கர் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story