செந்தில் பாலாஜி வழக்கு வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைப்பு

செந்தில் பாலாஜி வழக்கு வரும்  25ம் தேதிக்கு ஒத்திவைப்பு

செந்தில் பாலாஜியின் வழக்கு வரும் 25ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், அதுவரை அவரின் காவலும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜியின் வழக்கு வரும் 25ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், அதுவரை அவரின் காவலும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, தீர்ப்பை தள்ளிவைத்திருந்தார்.

இந்நிலையில், வழக்கு தொடர்பான வங்கி ஆவணங்களின் அடிப்படையில் வாதங்களை முன்வைக்க வேண்டியுள்ளதால், விடுவிக்க கோரிய மனு மீது மீண்டும் வாதிட அனுமதிக்ககோரி செந்தில் பாலாஜி சார்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் வங்கி ஆவணங்களை பெறுவதற்காக நீதிபதி எஸ்.அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார் செந்தில் பாலாஜி, வங்கி ஆவணங்கள் அவரிடம் வழங்கப்பட்டன.

வழக்கு 25ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது, அன்று காணொளி காட்சி வாயிலாக செந்தில் பாலாஜி ஆஜர் ஆவார், அது வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 34 வது முறையாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story