செந்தில் பாலாஜி வழக்கு; அமலாக்கத்துறை விடுவிக்கக்கோரிய மனு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மாநில போலீசார் தொடர்ந்துள்ள மோசடி வழக்குகளின் விசாரணை முடியும் வரை அமலாக்கத் துறை வழக்கின் விசாரணையை நிறுத்தி வைக்க செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார். செந்தில் பாலாஜி மனுவுக்கு ஏப்ரல் 25க்குள் பதிலளிக்கும்படி அமலாக்க துறைக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு உத்தரவு பிறப்பித்தனர்.

அமலாக்க துறை வழக்கு ஆரம்ப நிலையில் உள்ளதால் எந்த நிவாரணமும் வழங்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். மோசடி வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் முன் அமலாக்க துறை வழக்கு விசாரணையை துவங்க முடியாது என்று செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. அமலாக்க துறை வழக்கை விசாரணைக்கு அனுமதிக்கும் பட்சத்தில் மோசடி வழக்கில் விடுவிக்கப்பட்டால் பாதிப்பு ஏற்படும் என்றும் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையை மார்ச் 18ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்தார்.

Tags

Next Story