செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு - அமலாக்கத்துறை
செந்தில் பாலாஜி
சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கை மூன்று மாதங்களில் முடிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஒத்துழைக்க மறுக்கிறார் என சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டு வைத்துள்ளது.
போக்குவரத்துத் துறையில் வேலைவாங்கித் தருவதாக மோசடி செய்ததாக, எம்.பி.– எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரி செந்தில் பாலாஜி மனு அளித்துள்ளார். போதிய காரணங்கள் ஏதுமில்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறை பதில் மனு அளித்துள்ளது. வழக்கின் விசாரணையை ஜூன் மாதம் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
Next Story