செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்; 15 மாத கால சமரசமற்ற கடும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி: ஜோதிமணி

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்; 15 மாத கால சமரசமற்ற கடும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி: ஜோதிமணி

ஜோதிமணி எம்.பி

15 மாத கால சமரசமற்ற கடும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று செந்தில் பாலாஜி ஜாமீனை வரவேற்று கரூர் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார். க

15 மாத கால சமரசமற்ற கடும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று செந்தில் பாலாஜி ஜாமீனை வரவேற்று கரூர் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி தமிழக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி தற்போது வரையில் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் இருந்து வருகிறார். இந்த நிலையில் 471 நாட்கள் சிறை வாழ்க்கைக்கு பிறகு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உள்ளது. இதனை வரவேற்று கரூர் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள பதிவில், “15 மாத கால சமரசமற்ற கடும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. எவ்வளவோ கடினமான நாட்கள், துயரம்தனிமை எல்லாவற்றையும் தனது அசைக்கமுடியாத மன உறுதியோடு எதிர்கொண்டு வெற்றிபெற்றுள்ள செந்தில் பாலாஜி அவர்களுக்கு எனது அன்பும்,நல்வாழ்த்துக்களும்! அதிகாரத்திற்கு எல்லோரும் அடிபணிந்துவிட மாட்டார்கள். அதை எதிர்த்து நின்று வெற்றியடைவார்கள் என்பதை இந்தியா கூட்டணி தலைவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். அமலாக்கத்துறையால் அநீதியாக கைது செய்யப்பட்டு அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்ட இந்தியா கூட்டணியின் அனைத்து தலைவர்களும் சட்டப்போராட்டத்தை சந்தித்து வெற்றியடைந்துள்ளார்கள் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி,” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story