தொடர் விபத்து : குமரி முக்கடல் சங்கமம் பகுதியில் எம்.பி ஆய்வு.

தொடர் விபத்து : குமரி முக்கடல் சங்கமம் பகுதியில் எம்.பி ஆய்வு.
எம்.பி ஆய்வு

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் திரிவேணி சங்கமம் மக்கள் கடலில் புனித நீராடும் பகுதியாகும். இந்நிலையில் ஒன்றிய அரசின் கடற்கரை மேம்பாட்டு திட்டத்தில், மக்கள் புனித நீராடிய பகுதியில் கருங்கற்களால் சப்பாத்து போன்ற பகுதியை உருவாக்கினர். மணல் பரப்பில் சப்பாத்து அமைத்தால், எப்போதும் அலை அடித்துக் கொண்டிருக்கும் பகுதியில் பாசி படியும், இதனால் கடலில் நீராடுபவர்கள் கால் வழுக்கி விழும் நிலை ஏற்படும் என்ற எச்சரிக்கையை பொதுமக்கள் ஒன்றிய அரசின் அதிகாரிகளிடம் தெரிவித்த போது அதனை ஒன்றிய அரசு அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போது முக்கடல் சங்கம கடல் பரப்பில் சப்பாத்து பகுதியில் நீராடிய பலரும் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். சமீபத்தில் இரண்டு வட மாநிலத்தவர் குறிப்பிட்ட பகுதியில் வழுக்கி விழுந்ததில் தலையில் பலமான காயம் ஏற்பட்டு மரணம் அடைந்தனர்.இந்நிலையில் பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு குறித்து விஜய் வசந்த் எம்.பி சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். படித்துறையில் பாசி படிந்துள்ள பகுதியை முழுவதுமாக அகற்றி விட்டு மணல் பரப்பு பகுதியை மீண்டும் உருவாக்கிட நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்தார்.

Tags

Next Story