தமிழகத்தில் 62,559 லோக் அதாலத் வழக்குகளுக்கு தீர்வு

தமிழகத்தில்  62,559 லோக் அதாலத் வழக்குகளுக்கு தீர்வு

லோக் அதாலத் 

தமிழகத்தில் நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் 55 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பிலான 62,559 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது.
நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காண, தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படி, தமிழகத்தில் தேசிய லோக் அதாலத் நடத்தப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் 8 அமர்வுகளும், மதுரை கிளையில் 4 அமர்வுகளும், கீழமை நீதிமன்றங்களில் 482 அமர்வுகளும் அமைக்கப்பட்டு, வழக்குகள் தீர்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், 49 ஆயிரத்து 890 நிலுவை வழக்குகள், 12 ஆயிரத்து 669 நீதிமன்ற விசாரணைக்கு வராத வழக்குகள் என மொத்தம், 505 கோடியே 78 லட்சத்து 18 ஆயிரத்து 659 ரூபாய் மதிப்பிலான 62 ஆயிரத்து 559 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு உறுப்பினர் செயலர் நசீர் அகமது தெரிவித்துள்ளார்.

Tags

Next Story