பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சாக்கடை கால்வாய் பணி

பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சாக்கடை கால்வாய் பணி

பேருந்து நிலையம் அமைக்க பூமி பூஜை 

பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் ரூ.1கோடி 72 லட்சம் மதிப்பில் சாக்கடை கால்வாய் பணி நடைபெற்று வருகிறது.

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி 10வது வார்டு பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிக்காக 1கோடியே 72 லட்சம் ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிக்கான பூமிபூஜை விழா இன்று நடந்தது.

இதில் நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே என் நேரு கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம். மாவட்ட அவைத்தலைவர் கருணாநிதி, நெசவாளரணி அமைப்பாளர் ஆறுமுகம், தலைமை செயற்குழு உறுப்பினர் மனோகரன், தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் முத்துலிங்கம் பெத்தநாயக்கன்பாளையம் நகர செயலாளர் பாபு, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story