பாலியல் புகார் கைதிக்கு இன்று திருமணம் - 3 நாட்கள் நிபந்தனை ஜாமீன்

பாலியல் புகார்  கைதிக்கு இன்று  திருமணம் - 3 நாட்கள் நிபந்தனை ஜாமீன்

வைரவன்

பாலியல் புகார் வழக்கில் கைதானவருக்கு திருமணத்திற்காக மூன்று நாள் இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
நாகர்கோவில் கோட்டாரில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் அங்கு பணியாற்றி வரும் பெண் டாக்டர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆஸ்பத்திரி உறைவிட மருத்துவ அதிகாரி (பொறுப்பு) சுரேஷ் சிங் (52) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்யப்பட்டார். மேலும் இதன் தொடர்ச்சியாக அதே மருத்துவக் கல்லூரியில் படிக்கும் இரண்டு மருத்துவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 24 - ஆம் தேதி அன்று லேப் டெக்னீசியனான சுசீந்திரம் பகுதியை சேர்ந்த வைரவன் (35) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே கைது செய்யப்பட்ட வைரவனுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) திருமணம் நடைபெற உள்ளது. எனவே இந்த திருமணத்துக்காக ஜாமீன் வழங்க கோரி வைரவன் சார்பில் கூடுதல் மகிளா கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) மணிமேகலை வைரவனுக்கு மூன்று நாட்கள் இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கியும், மீண்டும் 30 ஆம் தேதி (திங்கள்கிழமை) , கோர்ட்டில் ஆஜர் படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதனால் வைரவனுக்கு ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று திருமணம் நடைபெற உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story