பாலியல் புகார் : ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியில் மருத்துவ அதிகாரி கைது

பாலியல் புகார் : ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியில் மருத்துவ அதிகாரி கைது

நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி

பாலியல் துன்புறுத்தல் குற்றசாட்டுக்குள்ளான கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி உறைவிட மருத்துவர் ஆன்டனி சுரேஷ்சிங்கை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில் கோட்டாரில் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் செயல்பட்டு வருகிறது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். படிப்பு முடித்தவர்கள் பயிற்சி டாக்டர்களாக அங்கேயே பணியாற்றி வருகின்றனர். மேலும் ஏராளமான டாக்டர்களும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்தநிலையில் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் பெண் மருத்துவர் ஒருவர் கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில், :- , ஆசாரிபள்ளம் அனந்தன்நகரை சேர்ந்த ஆன்டனி சுரேஷ்சிங் (வயது 52) உறைவிட மருத்துவராக (பொறுப்பு) உள்ளார். நான் தினமும் வருகை பதிவேட்டில் கையொப்பம் போட செல்லும் போது ஆன்டனி சுரேஷ்சிங் அவரது இன்பத்துக்கு உடன்பட வேண்டும் என்று கேட்கிறார். மேலும் விரும்பத்தகாத செயல்களை செய்து வருகிறார். என் மானத்தை அவமதிக்கும் எண்ணத்துடன் சைகை செய்கிறார். மேலும் பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த புகார் மனு தொடர்பாக நேற்று காலை ஆயுர்வேத மருத்துவக்கல்லூரிக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் பயிற்சி பெண் டாக்டர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது இந்த விசாரணைக்கு பிறகு உறைவிட மருத்துவர் ஆன்டனி சுரேஷ்சிங் மாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.



Tags

Next Story