செய்யாறு சிப்காட் திட்டத்தை கைவிட வேண்டும் - காவிரி உரிமை மீட்பு குழு ஆர்ப்பாட்டம்

செய்யாறு சிப்காட் திட்டத்தை கைவிட வேண்டும் - காவிரி உரிமை மீட்பு குழு ஆர்ப்பாட்டம்
செய்யாறு சிப்காட் திட்டத்தை முற்றிலும் கைவிட கோரி காவிரி உரிமை மீட்புக் குழுவினர் ஆர்ப்பாட்டம்
ஆர்பாட்டத்தில் பல கோரிக்கைகள் எழுப்பட்டன

செய்யாறு சிப்காட் திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும் எனக் கோரி காவிரி உரிமை மீட்புக் குழுவி னர் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் ரயிலடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு. ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமை வகித்தார். பொருளாளர் மணிமொழியன், நிர்வாகிகள் சாமி. கரிகாலன், தமிழர் தேசியக்களம் அமைப்பாளர் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், ஒருங்கிணைந்த நிலப்பறிப்பு சட்டத்தை நீக்க வேண்டும். செய்யாறு 3-ம் அலகு சிப்காட் திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும். அதற்காக விவசாயிகளி டம் இருந்து பல்வேறு வடிவங்களில் பறித்த நிலங்கள் அனைத்தையும் விவசாயிகளுக்கே திருப்பி கொடுக்க வேண்டும். நிலப்பறிப்பை எதிர்த்து போராடிய அனைவர் மீதும் உள்ள வழக்குகளை கைவிட வேண்டும். தனிநபரை பழிவாங்கும் உள் நோக்கத்துடன் போராட்ட ஒருங்கிணைப்பாளர் அருள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை நீக்கி, அவரை விடுதலை செய்ய வேண்டும்.

திமுக அரசு தேர்தல் அறிக்கை யில் கூறியபடி, விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் வகையில் விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் விளைநிலங்களை வேறு பயன் பாட்டுக்கு மாற்றுவது தடுக்கப்பட்டு விளைநிலங்கள் பாதுகாக்கப்படும் என்ற உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுந்தர. விமல் நாதன், இந்திய ஜனநாயக கட்சி மாவட்டத் தலைவர் சிமியோன் சேவியர்ராஜ், காவிரி உரிமை மீட்புக் குழுவைச் சேர்ந்த துரை. ரமேஷ், செந்தில்வேலன், ராமலிங்கம், தமிழ்த் தேசிய பேரியக்க மாவட்டச் செயலாளர் வைகறை, தமிழக விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த சிவப்பிரகாசம், தமிழக உழவர் முன்னணியைச்சேர்ந்த ராஜேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஆழ்துளை கிணற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் துரை.முருகேசன் நன்றி கூறினார்.

Tags

Next Story