நீட் தேர்வு முறைகேடுகள்! - குவியும் புகார்கள்!!

நீட் தேர்வு முறைகேடுகள்! - குவியும் புகார்கள்!!

நீட் தேர்வு

2023ல், நீட் தேர்வில் 2 மாணவர்கள் மட்டுமே 720/720 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்ற நிலையில் 2024ம் ஆண்டு நீட் தேர்வில் 67 மாணவர்கள் 720/720 மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர். இது நீட் தேர்வு செயல்முறையின் நேர்மை மீது பல கேள்விகளை எழுப்புகிறது என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்

ஹரியானாவில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதிய, ஒரே பயிற்சி மையத்தில் பயின்ற 8 பேர் முதலிடம் பிடித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் 550 நகரங்களில் சுமார் 4100 தேர்வு மையங்கள் இருந்தன. இருந்தும் ஹரியானாவில் உள்ள ஒரு மையத்தில் மட்டும் 8 பேர் முதலிடம் பெற்றது எப்படி என பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

718 மற்றும் 719 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் மதிப்பெண் விபரங்களும் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன, நீட்டில் சரியாக பதிலளித்தாள் ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு மதிப்பெண்கள் அளிக்கப்படுகிறது.

ஆனால் தவறாக பதிலளித்தாள் அந்த கேள்விக்கு நான்கு மதிப்பெண் குறைப்பதோடு மைனஸ் ஒரு மதிப்பெண் என மொத்தம் ஐந்து மதிப்பெண் குறைக்கப்படும் அப்படி என்றால் 718 மற்றும் 719 மதிப்பெண்கள் நிகழ சாத்தியமே இல்லை என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

சுமார் 1 லட்சம் MBBS இடங்களுக்கு 13.16 லட்சம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். பொதுப்பிரிவு மற்றும் EWS மாணவர்களுக்கான தகுதி மதிப்பெண் 720க்கு வெறும் 164 மதிப்பெண்கள்.

அதாவது வெறும் 22.77% மதிப்பெண் பெற்றால் போதும். பணமிருந்தால் தனியார் கல்லூரியில் மருத்துவர் சீட் பெற்றுவிடலாம். அவர்களுக்கு மட்டும் தகுதி மதிப்பெண்ணை ஏன் இவ்வளவு குறைக்கிறார்கள் என மற்ற மாணவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் 2023ல் 600ல் இருந்து 2024ல் 660 மதிப்பெண்களாக உயர்த்தப்பட்டது. பலரின் மருத்துவர் கனவை சிதைத்துள்ளது.

Tags

Next Story