"விஷ சாராயம் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டாமா?" - பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணத்தில் 61 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அதிமுக சார்பாக அடுத்தடுத்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஆதரவு தெரிவித்து பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டார்.
மேலும் இந்த விவகாரத்திற்கு "விஷ சாராய சம்பவத்திற்கு பொறுப்பேற்று அமைச்சர் முத்துசாமி ராஜினாமா செய்ய வேண்டும். விஷ சாராயம் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டாமா?. விஷ சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். அதிமுகவுக்கு விளம்பரம் தேட வேண்டும் என்ற அவசியம் இல்லை. நாளை ஆளுநரை சந்தித்து தேமுதிக சார்பில் மனு அளிக்க உள்ளோம்" என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
Next Story