பாடகர் பவதாரிணி உடல் நல்லடக்கம்

பாடகர் பவதாரிணி உடல் நல்லடக்கம்
X

இறுதி சடங்குகள் 

மயில் போல பொண்ணு ஒண்ணு கிளி போல பேச்சு ஒன்னு" பாடலை பாடி பவதாரணிக்கு இறுதி அஞ்சலி செலுத்தி உறவினர்கள் அவரை நல்லடக்கம் செய்தனர்.
பவதாரணியின் உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்கான இறுதி சடங்குகள் தற்போது நடைபெற்று அடக்கம் செய்வதற்காக அவரது உடலை தூக்கிச் சென்றனர். இளையராஜாவின் குடும்பத்தினர் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபு உள்ளிட்டோர் பவதாரணிக்கு இறுதி சடங்குகளை செய்தனர் .இந்நிலையில் இளையராஜா இசையமைப்பில் பவதாரணி பாடிய பாடலான "மயில் போல பொண்ணு ஒன்னு கிளி போல பேச்சு ஒன்னு" எனப் பாடல்களை அனைவரும் பாடி பவதாரணிக்கு இறுதி மரியாதை செலுத்தினர் .பின்னர் அவரது உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் தூக்கிச் சென்று இளையராஜாவின் தாய் மற்றும் மனைவியின் சமாதிக்கு நடுவில் நல்லடக்கம் செய்தனர்

Tags

Next Story