திண்டுக்கல் மருத்துவமனை தீ விபத்தில் புகையில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்துள்ளனர்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்
Ma. Subramanian
திண்டுக்கல் மருத்துவமனை தீ விபத்தில் புகையில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்துள்ளனர் என மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று (12-12-2024) இரவு 9.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. இதில், தாடிக்கொம்பு, பால திருப்பதி நகரைச் சேர்ந்த மணிமுருகன், மாரியம்மாள், தேனி மாவட்டம் சீலம்பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த சுருளி, சுப்புலட்சுமி, திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த ராஜசேகர், கோபிகா ஆகியோர் உயிரிழந்தனர். இந்த நிலையில், தீ காரணமாக ஏற்பட்ட புகையில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்ததாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், தீ விபத்தில் புகையில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்தில் 4 பேர் பலத்த காயம் அடைந்துள்ள நிலையில் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. காவல்துறை அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 41 பேரில் 6 பேர் சடலங்களாக மீட்கப்பட்ட நிலையில் 6 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவித்தார். மேலும் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டதால் நேற்று நூற்றுக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன. திண்டுக்கல் தனியார் மருத்துவமனை தீ விபத்தில் காயம் அடைந்தவர்களை சந்தித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆறுதல் அளித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் திண்டுக்கல் அரசு -மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் தனியார் மருத்துவமனை தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு அமைச்சர்கள் ஆறுதல் தெரிவித்தனர். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து அமைச்சர்கள் ஆறுதல் கூறினர். அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ஐ.பெரியசாமி, சக்கரபாணி உள்ளிட்டோர் ஆறுதல் கூறினர். தீ விபத்தில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம், படுகாயம் அடைந்தோருக்கு ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. தீ விபத்தில் லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000மும் அமைச்சர்கள் வழங்கினர்.