சேலம் : சிறுதானிய பயிற்சி திருவிழா - ஆர்வமுடன் பங்கேற்ற விவசாயிகள்

சேலம் : சிறுதானிய பயிற்சி திருவிழா - ஆர்வமுடன் பங்கேற்ற விவசாயிகள்

சிறுதானிய பயிற்சி திருவிழா 

மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறை சார்பில் சிறுதானிய பயிற்சி திருவிழா

மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறை மற்றும் சோனா தொழில்நுட்ப கல்லூரியின் அறிவியல் ஆராய்ச்சித்துறை இணைந்து சிறுதானிய ஆண்டை சிறப்பிக்கும் வகையில் காடையாம்பட்டி அடுத்த பண்ணப்பட்டி ஊராட்சியில் சிறுதானிய பயிற்சி மற்றும் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறு தானியங்களின் வகைகளும், சிறுதானியங்களில் மதிப்புக்கூட்டு பொருட்களும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும், சோனா தொழில்நுட்ப கல்லூரியின் அறிவியல் ஆராய்ச்சி துறை சார்ந்த பேராசிரியர்கள் மூலம் பொதுமக்களுக்கு சிறுதானியங்களில் மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில், சோனா தொழில்நுட்ப கல்லூரியின்துறைத் தலைவர் சத்யபாமா, பேராசிரியை ராஜேஸ்வரி மற்றும் நாகப்பன், பண்ணப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா தட்சணாமூர்த்தி, வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த சிறுதானியங்களின் பயிற்சி மற்றும் திருவிழாவில் அப்பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Tags

Next Story