பக்கவாதத்தினால் மகன் பாதிப்பு - பராமரிக்க இயலாமல் முதியவர்கள் தற்கொலை

அரவக்குறிச்சி ஆண்டிப்பட்டி கோட்டை அருகே பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட மகனை பராமரிக்க இயலாத விரக்தியில் முதிய தம்பதியினர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் எல்லைக்குட்பட்ட, ஆண்டிப்பட்டி கோட்டை அருகே உள்ள நெல்லி கோம்பை பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளையன் வயது 70.இவரது மனைவி மாரியம்மாள் வயது 65. இவர்களது மகன் சுப்பிரமணி வயது 49. கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார் சுப்பிரமணி. தனது மகன் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த போதும், தங்களால் அவருக்கு உதவிட இயலவில்லையே என வருத்தத்தில் முதியவர்கள் இருவரும் வாழ்ந்து வந்தனர். இதில் விரக்தி அடைந்த இருவரும் ஜனவரி 29ஆம் தேதி காலை 6:15 மணியளவில் அவர்களது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் அறிந்த சுப்பிரமணி, காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பெயரில்,சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், உயிரிழந்த இருவரது உடலையும் மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story