மகனை காணவில்லை - தந்தை காவல் நிலையத்தில் புகார்
விருதுநகர் அருகே சங்கரலிங்கபுரம் பகுதியில் மகனை காணவில்லை தந்தை காவல் நிலையத்தில் புகார்.
விருதுநகர் சங்கரலிங்கபுரம் பகுதியைச் சார்ந்தவர் சரவணகுமார் வயது 34 இவர் கடந்த மூன்று வருடங்களாக ஓமன் நாட்டில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது, விசா முடிந்த பிறகு கடந்த இரண்டரை மாதமாக விருதுநகர் அருகே உள்ள சங்கரலிங்கபுரத்தில் வசித்து வருவதாகவும், இவரின் மனைவி பிரசவத்திற்காக கன்னிச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், கடந்த 15ஆம் தேதி காலை 9 மணி 45 நிமிடம் அளவில் தனது தந்தையை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இறக்கிவிட்டு வெளியே நின்று கொண்டிருந்த சரவணகுமார் அவரது இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை அங்கே வைத்துவிட்டு மாயமானதாகவும் கூறப்படுகிறது. காணாமல் போனால் தனது மகனை கண்டுபிடித்து தர கோரி இளங்கோவன் நேற்று ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இதன் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story