சோனியா காந்தி பிறந்த நாள் விழா ராமர் கோவிலில் சிறப்பு பூஜை

சோனியா காந்தி பிறந்த நாள் விழா ராமர் கோவிலில் சிறப்பு பூஜை

சோனியா காந்தி பிறந்த நாள் விழா ராமர் கோவிலில் சிறப்பு பூஜை

பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய காங்கிரஸ் கட்சி சார்பில், கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் 77-வது பிறந்தநாள் விழா அயோத்தியாப்பட்டணத்தில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்குள்ள கோதண்டராமர் கோவிலில் சிறப்பு அபிஷேகமும், பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. விழாவிற்கு கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் சி.பி.வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் அயோத்தியாப்பட்டணம் வட்டார தலைவர் காந்தி, எஸ்.சி, எஸ்.டி. பிரிவு தலைவர் சுக்கம்பட்டி சிவக்குமார், அயோத்தியாப்பட்டணம் நகர தலைவர் கோவிந்தன், கிளை செயலாளர் சுரேஷ், துரைசாமி, பூமாலை மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story