தென் சென்னை : டெபாசிட் இழந்த அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தன்

தென் சென்னை : டெபாசிட் இழந்த அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தன்

ஜெயவர்தன்   

தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 5 லட்சத்து 16 ஆயிரத்து 628 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் டெபாசிட் இழந்தார்.

லோக்சபா தேர்தலில் பொது வேட்பாளர்கள் 25 ஆயிரம் ரூபாயும்; எஸ்.சி., - எஸ்.டி., வேட்பாளர்கள் 12 ஆயிரத்து 500 ரூபாயும் டிபாசிட் தொகை செலுத்த வேண்டும். இது வைப்பு தொகையாக வைக்கப்படும். தேர்தலில் ஒரு வேட்பாளர் மொத்தம் பதிவான ஓட்டுகளில் ஆறில் ஒரு பங்கு ஓட்டுகள் பெறவில்லை என்றால், அவர் செலுத்திய தொகையை திரும்பி வழங்கப்பட மாட்டாது. தொகுதியில் பதிவான ஓட்டுகளில், ஆறில் ஒரு பங்கை விட ஒரு ஓட்டு அதிகம் பெற்றால் மட்டுமே வேட்பாளர் செலுத்திய டிபாசிட் தொகை திரும்பக் கிடைக்கும்.

அந்த வகையில் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் 10 லட்சத்து 96 ஆயிரத்து 96 வாக்குகள் பதிவாகியுள்ளது. அதனை ஆறால் வகுத்தால் 1 லட்சத்து 82 ஆயிரத்து 671 வருகிறது. தென் சென்னை தொகுதியில் ஒருவர் டெபாசிட் தொகை திரும்ப பெற குறைந்தது 1 லட்சத்து 82 ஆயிரத்து 671 வாக்குகள் பெற வேண்டும். அப்படி பார்த்தால் தமிழிசை சவுந்தரராஜன் மட்டுமே 2 லட்சத்து 90 ஆயிரத்து 683 வாக்குகள் பெற்று அந்த இலக்கை எட்டியுள்ளார். அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் 1 லட்சத்து 72 ஆயிரத்து 491 வாக்குகள் மட்டுமே பெற்றதால் டெபாசிட் தொகையை இழந்தார். டெபாசிட் தொகையை பொறுத்தவரை தமிழிசை சவுந்தரராஜனை தவிர தென் சென்னை தொகுதியில் தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர்.

Tags

Next Story