தென்மாவட்டங்கள் நன்றாக இருக்கிறது அப்படியே இருக்கட்டும்:கனிமொழி எம்பி
கனிமொழி எம்பி
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவரிடம் தூத்துக்குடி கடந்த மாதம் 28-ம் தேதி வருகை தந்த பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து மேடையில் பேசுகையில்,
தென் தமிழகத்தை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள் நான் பார்த்து கொள்கின்றேன் என்று கூறி இருந்தார் இதற்கு பதிலளித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி நாட்டை ஒப்படைத்தற்கே எந்த நிலமையில இருக்குன்னு பார்த்துகிட்டு இருக்கோம் இதுலே தென் தமிழகத்தை ஒப்படைத்தால் என்ன ஆவது இப்பொழுது தென் மாவட்டங்கள் நன்றாக இருக்கிறது அப்படியே இருக்கட்டும் என்றார்.
திமுக காங்கிரஸ் கட்சிகள் தொடர்ந்து 50-ஆண்டுகள் ஊழல் கட்சியாக இருக்கின்றது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனத்திற்கு அதற்கென ஒரு சட்டம் கொண்டு வந்து ஊழலை சட்டபூர்வமாக ஓன்றாக மாற்றியது பாஜக-தான் அதனால் அவர்களுக்கு மற்றவர்களை பற்றி பேச தகுதி கிடையாது. என்றார்.