பிஜேபிக்கு அதிமுக நிர்வாகிகள் செல்ல மாட்டார்கள்-எஸ்.பி.வேலுமணி!

பாஜகவிற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை:சிங்காநல்லூர் பகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளருமான சிங்கை ராமச்சந்திரனின் தந்தையுமான சிங்கை கோவிந்தராஜனின் 25 வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.அதில் முன்னாள அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுணன்,கே.ஆர்.ஜெயராமன் மற்றும் சூலூர் கந்தசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மறைந்த சட்டமன்ற உறுப்பினர் சிங்கை கோவிந்தராஜன் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார். மேலும் யாரெல்லாம் கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என்றும் You tube,சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல் வருகிறது.அதையெல்லாம் நான் பார்ப்பதில்லை ஆனால் அந்த தகவலை பார்த்து அண்ணன் அம்மன் அர்ஜூணன் கோவப்பட்டார் என்றும் அதை பற்றியெல்லாம் பேசினால் நமக்கு நேரம் வேஸ்ட் என்றும் குறிப்பிட்டார்.திமுக -அதிமுக ஒன்று சேராது காங்கிரஸ் - பாஜக ஒன்று சேராது அதே போல தான் ஏன் நாம் இதையெல்லாம் பேச வேண்டும் எனவும் அம்மா பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 30 ஆண்டுகளாக நானே ரத்த தானம் செய்து வருகிறேன்.நேற்று முன் தினம் தான் இரத்த தானம் செய்து வந்தேன் என்றும் அதிமுக என்பது தாய் வீடு.அனைவரும் தாய் வீட்டிற்குதான் வருவார்கள் யாரும் வெளியே போகமாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.மேலும் அதிமுக உலகிலேயே 7ஆவது பெரிய கட்சி இது நம்ம கட்சி சாதாரன குடும்பத்தில் பிறந்த நம்மை எம்.எல்.ஏ வாக,அமைச்சராக மாற்றி அழகு பார்த்தவர் அம்மா என்றும் கூறியதுடன் வெரும் 3 அல்லது 4 சதவீதம் வாக்காளர்கள் உள்ள பாஜகவில் நாம் சேர போகிறோம் என்று கூறினால் நாம் பதில் கூற வேண்டுமா? என கேள்வி எழுப்பினார்.அதிமுக தமிழகத்தில் 35 முதல் 40 சதவீத வாக்காளர்கள் உள்ள கட்சி என்றும் இதற்கெல்லாம் பதில் கூற வேண்டாம் அம்மன் அர்ஜூணன் அவர்களே டோன் கேர் ( don’t care ) என விட்டுச் செல்லுங்கள்,கவலை படாதீர்கள்.நம்மை பற்றி தொண்டர்களுக்கு தெரியும் மக்களுக்கும் தெரியும் எனவும் இப்போது கோவையில் உள்ள அம்மன் கே.அர்ஜூணன்,ஜெயராம்,கந்தசாமி உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் இரண்டு முறை எம்.எல்.ஏ வாக ஆக்கியுள்ள இந்த கட்சியை விட்டு வெறும் 3,4 சதவீத கட்சியான பாஜகவிற்கு போவார்களா? என்றும் கூறினார்.பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ள நமக்கு காலரை தூக்கி சென்று நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகளை கேட்கும் தகுதி உள்ளது என்றும் அவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை என்றும் எடப்பாடியாருக்கு அனைத்து தொகுதிகளிலும் வெற்றியை தேடி தருவது தான் லட்சியம் என்றும் தெரிவித்தார்.

Tags

Next Story