விண்வெளி தொழில் பூங்கா - கனிமொழி எம்.பி., வரவேற்பு!!

விண்வெளி தொழில் பூங்கா - கனிமொழி  எம்.பி., வரவேற்பு!!

கனிமொழி எம்.பி., 

குலசேகரப்பட்டினத்தில் புதிய விண்வெளி தொழில் மற்றும் உந்துசக்தி பூங்கா அமைக்க தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதற்கு கனிமொழி எம்பி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
குலசேகரப்பட்டினத்தில் புதிய விண்வெளி தொழில் மற்றும் உந்துசக்தி பூங்கா அமைக்க தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதற்கு கனிமொழி எம்பி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருவதையொட்டி, அப்பகுதியில் வான்வெளி சார்ந்த தொழிற்சாலைகளை ஊக்குவிக்கும் விதமாக 2000 ஏக்கர் பரப்பளவில், புதிய விண்வெளி தொழில் மற்றும் உந்துசக்தி பூங்கா அமைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களின் வளர்ச்சிக்கு இத்திட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோருக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story