குலசையில் விண்வெளி பூங்கா : டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு
குலசை ராக்கெட் ஏவுதளம்
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை டிட்கோ வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் 2,233 ஏக்கரில் இஸ்ரோ சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த பிப். 28-ம் தேதி தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிலையில், 1,500 ஏக்கரில் விண்வெளி ஆய்வு மையத்திற்கு அருகே தொழிற்சாலை, உந்து சக்தி பூங்கா அமைப்பதற்கான அறிவிப்பை டிட்கோ வெளியிட்டுள்ளது. விண்வெளி பூங்கா அமைப்பதற்கு இஸ்ரோவின் இன்ஸ்பேஸ் நிறுவனத்துடன் டிட்கோ ஒப்பந்தம் செய்துள்ளது.
Next Story