பரந்தூர் பசுமை விமான நிலையம் அரசாணை: சிறப்பு பார்வை
பரந்தூர் விமான நிலையம் அமைக்க அரசாணை
பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைப்பது தொடர்பாக நிலம் கையகப்படுத்த அக்டோபர் 31 ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இரு தாலுகாக்களில் 3774 பட்டா நிலங்களும் 1972 அரசு நிலங்களும் பரந்தூர் உள்ளிட்ட 20 கிராமங்களில் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையில், பசுமை விமான நிலையம் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்காக அமைக்கப்படுவதாகவும், இதன் மூலம் தொழில் வளர்ச்சி, சுற்றுலா , சரக்குகள் கையாளுதல் மற்றும் மருத்துவத்துறை அதிகம் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தமிழகத்தில் தலைசிறந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரியில் அமைந்துள்ளதால் மருத்துவ சேவைக்காக ஆண்டுக்கு 15 லட்சம் நோயாளிகள் தமிழகம் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் முதலில் பதிமூன்று கிராமங்களை ஒருங்கிணைத்து செயல்படும் என அறிவித்த நிலையில் தற்போது 20 கிராமங்கள் இணைப்பு என அறிவிப்பு அதிர்ச்சி அளித்துள்ளது.
விமான நிலையம் அமைக்க திருப்போரூர், படாளம், பரந்தூர் மற்றும் பன்னூர் உள்ளிட்ட நான்கு இடங்களில் ஆய்வு நடத்தியதில் , திருப்போரூர் மற்றும் படாளம் பகுதி அருகே துப்பாக்கி சுடும் தளம் மற்றும் கல்பாக்கம் அணுமின்நிலையும் உள்ளதாகவும், பன்னூர் பகுதியில் குறைந்த அளவு இடம் மற்றும் அருகில் தொழிற்சாலைகள் உள்ளதால் இப்பகுதிகள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
பரந்தூர் பகுதியில் அரசு மற்றும் பட்டா நிலங்கள் 5351 ஏக்கரும், பன்னூரில் 4284 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது. பரந்தூரை பொருத்தவரையில் , இங்கு 1005 குடியிருப்புகள் ( பன்னூர் - 1546) உள்ளது. பரந்தூர் அருகே ஐந்து மாநில நெடுஞ்சாலைகள் நான்கு திசைகளிலும் இணையும் வகையில் உள்ளதும், 500 மீட்டரில் சென்னை - பெங்களூர் 8 வழி விரைவு சாலை உள்ளதும், ஐந்து கிலோ மீட்டரில் காஞ்சிபுரம் ரயில்வே நிலையம் உள்ளது.
மேலும், மிக முக்கியமாக நில வழிகாட்டு மதிப்பீடு பன்னூரை காட்டிலும் பரந்தூரில் மூன்று மடங்கு மதிப்பீடு குறைவு என்பதால் திட்ட மதிப்பீடு குறைவாகும் என்பதும் ஒரு காரணமாக விளங்குகிறது. விரிவாக்கம் செய்ய கூடிய நிலையில் பரிந்தூரை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான தரிசு நிலங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் உயர் மின்னழுத்த கோபுரங்கள் ஏதும் பரந்தூர் பகுதியில் இல்லை என்பதும் தேர்விற்கு ஏதுவாக உள்ளது.
காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வட்டங்களில் உள்ள 19 கிராமங்களில் பட்டா நிலங்கள் எனும் வகையில் 3774 ஏக்கரும், அரசு நிலங்களை பொறுத்தவரை 1972 ஏக்கரும் என மொத்தம் 5746 ஏக்கர்கள் அமைந்துள்ளது. நில வழிகாட்டின் மதிப்பின்படி 20 கிராமங்களில் உள்ள பட்டா நிலங்களை கையகப்படுத்த ரூபாய் 473 கோடி ரூபாய் உத்தேச மதிப்பீடாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் குடியிருப்புகளை காலி செய்யும் நிலையில் புதிய குடியிருப்பு வகையில் 16 வகையான அடிப்படை வசதிகள் அமைத்து தரப்படும் எனும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலம் கையகப்படுத்த மூன்று மாவட்ட வருவாய் அலுவலர்கள், மூன்று துணை ஆட்சியர்கள், 29 சிறப்பு நிலை வட்டாட்சியர்கள், அறுபது வருவாய் அலுவலர்கள், இருபத்தி நாலு சிறப்பு நிலை நில அளவையர்கள் என மொத்தம் 326 அலுவலர்கள் பணி அமர்த்தபடுவதாகும். இவர்களுக்கான சம்பளம், வாகன வாடகை உள்ள டீவிகளுக்கு வருடத்திற்கு 19 கோடியே 24 லட்சம் என உத்தேசிக்கப்பட்ட மதிபிடபட்டுள்ளது. காஞ்சிபுரம் வட்டத்தில் 1302.28 ஹெக்டேர் நிலம், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 1023.15 ஹெக்டேர் நிலம் என மொத்தம் 2325.44 ஹெக்டேர் நிலம் கையபடுத்தப்படும் என இந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.