கலைஞர் கனவு திட்டத்திற்கு தனிக்கவனம் - முதல்வர் ஸ்டாலின் !

கலைஞர் கனவு திட்டத்திற்கு தனிக்கவனம் - முதல்வர் ஸ்டாலின் !

ஸ்டாலின் 

14 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் ''புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் விரைவில் தொடங்கப்படும்.

தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை பெருமளவில் கட்டுப்படுத்தி இருக்கிறோம். போதை பொருள் நடமாட்டம் என்பது சட்டம் - ஒழுங்குப் பிரச்சினை மட்டுமல்ல, சமூக ஒழுங்குப் பிரச்சினை. போதைப் பொருள் நடமாட்டம் இருக்கும் என கண்டறியப்படும் பகுதிகளில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்

'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்திற்கும்; இரண்டரை லட்சம் தொகுப்பு வீடுகளைப் புனரமைக்கும் திட்டத்திற்கும் தனி கவனம் செலுத்த வேண்டும் .'' எனத் தெரிவித்தார்.


Tags

Read MoreRead Less
Next Story