பொன்முடியின் செம்மண் குவாரி வழக்கில் சிறப்பு நீதிமன்ற உத்தரவு ரத்து

பொன்முடியின் செம்மண் குவாரி வழக்கில் சிறப்பு நீதிமன்ற உத்தரவு ரத்து

பொன்முடி

முன்னாள் அமைச்சர் பொன்முடி தொடர்புடைய செம்மண் குவாரி வழக்கில் விழுப்புரம் சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2006 முதல் 2011 ஆம் ஆண்டுகளில் அமைச்சராக க.பொன்முடி பதவி வகித்தபோது, அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம், அரசுக்கு 28.36 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக 2012ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பொன்முடி, மகன் கவுதம சிகாமணி, ராஜமகேந்திரன் ஆகியோருடன் வி.ஜெயசந்திரன் என்பவரும் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை வழக்கில் சேர்க்கப்பட்டு இருந்தார். வழக்கு ஆவணங்களை வழங்கக் கோரி செம்மண் குவாரி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயச்சந்திரன் தாக்கல் செய்த மனு சிறப்பு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு இருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ஜெயச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். முன்னாள் அமைச்சர் பொன்முடி தொடர்புடைய செம்மண் குவாரி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு, வழக்கு ஆவணங்களை வழங்க மறுத்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags

Next Story