சேலம் மாநகராட்சி சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்
பொது மருத்துவ முகாம்
சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண்.22-ல் சிவதாபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமினை மேயர் இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
இம்முகாமில் பொதுமக்கள், தூய்மை பணியாளர்கள் என 1071 நபர்களுக்கு பன்நோக்கு சிறப்பு மருத்துவ ஆலோசனையுடன் கூடிய முழு உடல் மற்றும் இரத்த பரிசோதனை, கண் பரிசோதனை, சித்தா, இயன்முறை, பல், பொது நல மருத்துவம், மன நலம், அறுவை சிகிச்சை, எழும்பு முறிவு, தொழுநோய், காசநோய் மருத்துவம் உள்ளிட்ட சிகிச்கைகள் வழங்கப்பட்டது. கர்ப்பிணிப் பெண்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
மேலும் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் பொதுமக்கள் பதிவு செய்யும் பணிகளை பார்வையிட்டனர். பொதுமக்கள் விழிப்புணர்வுக்காக டெங்கு கொசு உற்பத்தியாகக்கூடிய பொருள் மாதிரிகளை பார்வையிட்ட மேயர் பொதுமக்களுக்கு டெங்கு கொசு உற்பத்தியினை தடுக்கும் வகையில் மழைநீர் தேங்காதவாறு வீடு மற்றும் சுற்றுபுறங்களை தூய்மையாக வைக்க வேண்டும் என கூறினார்.