சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு நோக்கு கூட்டம்

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு நோக்கு கூட்டம்
சிறப்பு நோக்கு கூட்டம்
இந்தியாவிலேயே தமிழகத்தை தொழில்மிகை மாநிலமாக மாற்றும் பொருட்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 ஆம் ஆண்டு ஜனவரி 07 மற்றும் 08 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடபட்டுள்ளது இதற்கான முன்னோட்டமாக அரியலூர் மாவட்டத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு நோக்கு கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் நாளை நடைபெற உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இதில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு தொழில் முனைவோர்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வழங்க உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. எனவே அரியலூர் மாவட்டத்தில் தொழில் தொடங்க ஆர்வமுள்ள பிற மாவட்ட தொழில் முனைவோர்களும் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டு கொள்ளபட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட தொழில் மையத்தை நேரிலோ அல்லது 89 25 53 39 25 மற்றும் 89 25 53 39 26 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
Next Story