மதுரை வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கம்

மதுரை வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கம்

மதுரை ரயில் நிலையம் 

கிறிஸ்துமஸ் தினத்தன்று மதுரை வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

கிறிஸ்துமஸ் தினத்தன்று மதுரை வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில் பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க டிசம்பர் 25 அன்று மதுரை வழியாக நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி நாகர்கோவில் - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ஒரு வழி சிறப்பு ரயில் (06046) நாகர்கோவிலில் இருந்து டிசம்பர் 25 அன்று இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.15 மணிக்கு சென்னை சென்று சேரும். இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயிலில் 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 5 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் மற்றும் ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி ஆகியவை இணைக்கப்படும். ‌ இந்த ரயிலுக்கான பயண சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

Tags

Next Story