பொங்கல் பண்டிகை; சிறப்பு ரெயில்கள் நாளை முதல் இயக்கம்!!

பொங்கல் பண்டிகை; சிறப்பு ரெயில்கள் நாளை முதல் இயக்கம்!!

train

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் கூட்டநெரிசலை தவிா்க்கும் நோக்கில் சென்னையில் இருந்து நாளை முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் கூட்டநெரிசலை தவிா்க்கும் நோக்கில் சென்னையில் இருந்து நாகா்கோவில், திருநெல்வேலி, மதுரைக்கு நாளை (சனிக்கிழமை) சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், சென்னை எழும்பூரில் இருந்து நாளை (சனிக்கிழமை) இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண் 06101) மறுநாள் பகல் ஒரு மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். மறுமாா்க்கமாக திருநெல்வேலியில் இருந்து நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு மறுநாள் அதிகாலை 2.40 மணிக்கு வந்தடையும். இந்த ரெயில் மாம்பலம், தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், கடலூா், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூா், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இதில் தலா 2 ஏசி வகுப்பு மற்றும் படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 10 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். தாம்பரத்தில் இருந்து நாளை (சனிக்கிழமை) இரவு 9.35 மணிக்கு புறப்படும் சிறப்பு அதிவிரைவு ரெயில் (எண் 06099) செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி வழியாக மறுநாள் காலை 9.20 மணிக்கு நாகா்கோவில் சென்றடையும். மறுமாா்க்கமாக நாகா்கோவிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு புறப்பட்டு அதே நாள் நள்ளிரவு 12.05 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இதில் 3 ஏசி வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 9 பெட்டிகள், 6 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண் 06067) திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சாமல்பட்டி, பொம்மிடி, ஈரோடு, திருப்பூா், கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன் சத்திரம், திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு வழியாக மறுநாள் காலை 5 மணிக்கு மதுரை சென்றடையும். மறுமாா்க்கமாக மதுரையில் இருந்து நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் காலை 9.20 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும். இதில் 11 ஏசி வகுப்பு பெட்டிகள் படுக்கை வசதி கொண்ட 6 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு 8 முன்பதிவில்லாப் பெட்டிகள் கொண்ட மெமு ரெயில் இயக்கப்பட உள்ளது. சென்னை எழும்பூரில் சனிக்கிழமை காலை 10.45 மணிக்கு புறப்படும் ரெயில் இரவு 7.15 மணிக்கு மதுரை சென்றடையும். மறுமாா்க்கமாக மதுரையில் இருந்து நாளை (சனிக்கிழமை) இரவு 8.30 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் அதிகாலை 4.40 மணிக்கு எழும்பூா் வந்தடையும். இந்த ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story