கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சை மருத்துவ முகாம்

கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சை மருத்துவ முகாம்
பரிசு வழங்கிய போது எடுத்த படம்
எருமைபட்டியில் நடந்த கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சை மருத்துவ முகாமில் 200க்கும் மேற்பட்ட கால்நடைகள் சிகிச்சை பெற்றன.

எருமப்பட்டி ஜனவரி 6 எருமப்பட்டி பிடாரி அம்மன் கோவில் வளாகத்தில் கால்நடை சிகிச்சை சிறப்பு முகாம் மற்றும் கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு நோய் நிகழ்வியல் அலுவலர் மருத்துவர் சுந்தரேசன் தலைமை வகித்தார் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு எருமப்பட்டி பேரூராட்சி தலைவர் பழனியாண்டி முகாமினை துவக்கி வைத்தார்.

இம்முகாமில் குடல் புண் நீக்கம் நோய் தடுப்பூசி மலட்டுத்தன்மை சிறப்பு சிகிச்சை ,ஆண்மை நீக்கம் ,சினை பரிசோதனை , செயற்கை கருவூட்டல் மற்றும் கால்நடை வளர்ப்பு குறித்தும் விளக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மண்டல இணை இயக்குனர் மருத்துவர் நடராஜன் உதவி இயக்குனர் மருத்துவர் மருதுபாண்டி மற்றும் நோய் புலனாய்வு பிரிவு கால்நடை உதவி மருத்துவர்கள் , மருத்துவர் ரமேஷ் மருத்துவர் சதீஷ் மற்றும் எருமைபட்டி ஒன்றிய கால்நடை உதவி மருத்துவர்கள் செந்தில்குமார் வேலாயுதம் தங்கபாணி மற்றும் எருமப்பட்டி பேரூராட்சி துணைத்தலைவர் ரவி வார்டு கவுன்சிலர் உதயகுமார் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஏராளமான விவசாயிகள் கால்நடை வளர்ப்பவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் நிகழ்ச்சியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மாடுகளும் 250க்கும் மேற்பட்ட ஆடுகளும் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றன. கன்றுகளை சிறந்த முறையில் பராமரிப்பு செய்த 10 கால்நடை வளர்ப்பவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. சிறப்பு முகாம் காண ஏற்பாடுகளை எருமப்பட்டிகால்நடை உதவி மருத்துவர் சேகர் செய்திருந்தார்,

Tags

Next Story