ஸ்ரீரங்கம்: ஐயப்ப பக்தர்கள் - கோவில் பணியாளர்கள் மோதல்

ஸ்ரீரங்கம்: ஐயப்ப பக்தர்கள் -  கோவில் பணியாளர்கள்  மோதல்

காயமடைந்தவர் 

ஸ்ரீரங்கம் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் - கோவில் பணியாளர்களுக்கிடையே மோதலால் பரபரப்பு ஏற்பட்டது

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதான பூலோக வைகுந்தம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி அருள்மிகு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதேசி விழா திருநெடுதாண்டவத்துடன் துவங்கியது. இதன் காரணமாக ஏராளமான பக்தர்கள் காலை முதல் அதிக அளவில் அரங்கனை தரிசனம் செய்தனர் . மேலும் தற்போது கார்த்திகை மாதம் ஐயப்பனுக்கு மாலை போட்டு சபரிமலை செல்லும் பக்தர்களின் கூட்டமும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் காலை திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் சிலர் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளனர். அப்பொழுது அவர்கள் மூலஸ்தானம் அருகே சென்று கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டதாக கூறப்படுகிறது. மேலும் அங்கிருந்து உடனடியாக நகராமல் நின்றதால் அங்கு பணியில் இருந்த கோவில் பணியாளர்கள் அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்தியுள்ளனர்.

அப்போது இரு பிரிவினருக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது கோவில் பணியாளர்களும், பக்தர்களுக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டதாகவும் இதில் கோவில் பணியாளர்கள் தரப்பிலும் பக்தர்கள் தரப்பிலும் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தாக்கப்பட்ட கோவில் காவலர்கள் திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் மேலும் பக்தர்களும் அனுமதிக்கப்பட்டுள்ளார் . இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் துறையினர் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story