ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலமாக துவங்கியது

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் திருநெடுந்தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா துவங்கியது.

திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் பகல் பத்து உற்சவத்தின் முதல் நாளான இன்று, நம் பெருமாள் பாண்டியன் கொண்டை, லட்சுமி பதக்கம், வைர அபயஹஸ்தம், பவள மாலை, சூரிய பதக்கம், முத்துமாலை, காதுகாப்பு உள்ளிட்ட ஆபரணங்கள் தரித்து மூலஸ்தானத்தில் இருந்து, ஆழ்வார்களுடன், அர்ஜுனா மண்டபத்துக்கு எழுந்தருளிர்.

ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் வழிபட்டனர். பகல்பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான வைகுண்ட ஏகாதசி (பரமபதவாசல் திறப்பு) 23.12.2023அதிகாலை 04.00 மணிக்கு நடைபெறுகிறது. ஜனவரி 2ஆம் தேதி காலை நம்மாழ்வார் மோட்சத்துடன் விழா நிறைவடைகிறது.

Tags

Next Story