ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திருக்கல்யாண உற்சவம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திருக்கல்யாண உற்சவம்
 திருக்கல்யாண உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது..
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திருக்கல்யாண உற்சவம் இன்றுகொடியேற்றத்துடன் துவங்கியது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் 108 வைணவத் தலங்களில் முக்கியமான தலமாகும்

. தமிழக அரசின் முத்திரை தனமாக விளங்கும் ராஜகோபுரம் அமைந்திருக்கும் அம்சம் பெற்ற ஆண்டாள் கோவிலில் இங்கு கொண்டுள்ள ஆண்டாள்,வடபத்ர சயனப் பெருமாள் மீது தீராத அன்பு கொண்டு மார்கழி நோன்பிருந்து பங்குனி உத்தர நன்நாளில் ஸ்ரீ ரங்க அரங்கனை கைத்தலம் பற்றினாள்,

இந்த ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஆண்டுதோறும் பங்குனி மாதம் உத்திர திருநாளில் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு திருக்கல்யாண உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.இதனை முன்னிட்டு ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு அதிகாலையில் சிறப்புத் திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து வேதம் மந்திரங்கள் முழங்க பட்டாச்சாரியர் கொடிமரத்து பட்டத்தை ஏற்றி வைத்தார்.ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் சுவாமிகள் தினமும் காலையில் மண்டபம் எழுந்தருளால் இரவு பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான ஆண்டாள் திருக்கல்யாணம் உற்சவம் பங்குனி உத்திரத் தினத்தன்று வரும் 25 ஆம் தேதி இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

அதற்கு முன்னதாக அன்று காலை செப்பு தேரோட்டம் என்ற நிகழ்ச்சி நடைபெறும். ஆண்டாள் ரெங்க மன்னார் திருக்கல்யாண உற்சவத்தை காண்பதற்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய கொடியேற்ற விழாவில் முக்கிய பிரமுகர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story