எஸ்எஸ்எல்சி தேர்வு : கணக்கு பாடத்தில் சாதித்த பழங்குடியின மாணவி.

எஸ்எஸ்எல்சி தேர்வு : கணக்கு பாடத்தில் சாதித்த பழங்குடியின மாணவி.

மாணவி தனுஷா

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பச்சைமலை கிராமத்தில் உள்ள சிலையூர் பகுதியை சேர்ந்த பழங்குடியின மாணவி10 ம் வகுப்பு தேர்வில் கணக்கு பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தார்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பச்சைமலை கிராமத்தில் உள்ள சிலையூர் பகுதியைச் சேர்ந்த ராதிகா என்பவரின் மகள் தனுஷா. இவர் பச்ச மலை சின்ன இலுப்பூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு இறுதி ஆண்டு தேர்வு எழுதினார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.அதில் தனுஷா கணக்கு பாடத்தில் 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் பழங்குடியின மாணவி என்றும் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வருவதாகவும் நாங்கள் விவசாய குடும்பத்தை சார்ந்துள்ளதாகவும் கூறினார் குடும்ப சூழ்நிலை காரணமாக தன்னால் அனைத்து பாடத்திலும் 100/100 மதிப்பெண் பெற முடியவில்லை என்று கூறினார் எதிர்காலத்தில் நல்ல முறையில் படித்து கலெக்டராக வரவேண்டும் என லட்சியம் இருப்பதாகவும் கூறினார்.

போதிய பொருளாதார வசதி இல்லாத காரணத்தினாலும் குடும்ப சூழ்நிலை காரணத்தினாலும் தன்னால் அனைத்து பாடத்திலும் 100/100 மதிப்பெண் எடுக்க முடியவில்லை என்ற தெரிவித்தார் மேலும் தான் பன்னிரண்டாம் வகுப்பில் அனைத்து பாடத்திலும் நூற்றுக்கு மதிப்பெண் எடுப்பேன் என்று உறுதியுடன் கூறினார் தற்போது கணக்கு பாடத்தில் 100 மதிப்பெண் எடுப்பதற்கு உறுதுணையாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார.

Tags

Read MoreRead Less
Next Story