''ஸ்டாலின் பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்'' அண்ணாமலை ஆவேசம் !

ஸ்டாலின் பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் அண்ணாமலை ஆவேசம் !

அண்ணாமலை - முதல்வர் ஸ்டாலின் 

முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

ஒடிசாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தொலைந்து போன பூரி ஜெகந்நாதர் கோயிலின் கருவூல அறை சாவி தமிழ்நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டதாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியனை மறைமுகமாக விமர்சித்தார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டிற்கு வரும் போது, தமிழையும், தமிழர்களையும் உயர்வாக போற்றி பேசும் பிரதமர் மோடி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்களில் வாக்கு சேகரிக்கும்போது, தமிழ்நாட்டு மக்களை திருடர்களைப் போலவும், வெறுப்பு மிகுந்தவர்களாகவும் அந்த மாநிலங்களுக்கு எதிரானவர்களாகவும் பேசுவது இரட்டை வேடம்.'' என விமர்சித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக தலைவர் அண்ணாமலை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், '' முதல்வர் மு.க.ஸ்டாலின், பொய் சொல்வதையே முழு நேர வேலையாக வைத்துள்ள்ளார். முதல்வர் ஸ்டாலின் பேசிய பொய்களை பக்கத்தை வைத்து அடுக்கினால் அதை நிரப்ப முடியாது.. இந்தியாவை ஆள ஒருவர் இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும். தமிழக முதல்வராக வரும் நபர், தமிழனாக இருக்க வேண்டும். இதேபோல, ஒவ்வொரு மாநில மக்களும் விரும்புகின்றனர்.

ஒடிசா தேர்தல் பரப்புரையில் தமிழர்களை அவமதித்து பிரதமர் மோடி பேசிவிட்டார் என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மை என்ன?அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான் அந்தந்த மாநிலத்தின் முதல்வராக வர வேண்டும். விகே பாண்டியன் என்பவர் 12 வருடங்களாக ஒடிசா முதல்வர் நவின் பட்நாயக்கின் தனி செயலாளராக இருந்தவர். பிரதமர் மோடி பேசியிருப்பது, 'புரி ஜெகன்னாத ஆலயத்தின் சாவி காணாமல் போய் விட்டது. அதை யாரோ திட்டமிட்டு மறைத்துள்ளனர்' என்றார். எனவே, முதல்வர் பொய் கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். பிரதமர் மீது பழி சுமத்துவது கண்டிக்கத்தக்கது.'' என கண்டனம் தெரிவித்துள்ளார்.


Tags

Next Story